Sunday, July 29, 2007

இன்டர்நெட் வழியாக பணம்

இன்டர்நெட் வழியாக பணம் சம்பாதிப்பது இப்போது பரவலாக பேசப்படும் செய்திகளில் ஒன்றாகிவிட்டது. பல பெரிய நிறுவணங்கள் தங்களது விளம்பரங்களை agloco போன்ற பெரிய நிறுவணங்கள் வழியாக விளம்பரப்படுத்துகின்றன, அதற்க்காக அவர்கள் தரும் விளம்பரத்தொகையை agloco ல் ரிஜிஸ்ட்டர் செய்த உருப்பினர்களுக்கு பங்கு தருகிறார்கள். இதற்க்காக நம்மிடமிருந்து எந்த தொகையும் வசூலிப்பதில்லை. --- நீங்களும் முயற்ச்சிசெய்து பார்க்கலாமே ---

Friday, July 27, 2007

ஸ்மைல் பிலீஸ்......

நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?
---------------------------------------------------------------------
எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?

ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.
---------------------------------------------------------------------
உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!

ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!
---------------------------------------------------------------------
ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!

எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
---------------------------------------------------------------------
ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.
பையன் என்ன பண்றான்?
டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்

----------------------------------------------------------------------
"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...
""அடையாளம் சொல்லுங்க...
""அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"
-------------------------------------------------------------------------
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !

நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
-------------------------------------------------------------------------
என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க.

அப்படியா... என்ன பண்ணினாங்க?
எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்
--------------------------------------------------------------------------
கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?

ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் home work செய்யலை சார்
---------------------------------------------------------------------------
நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்! டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?

நோயாளி: சைதாப்பேட்டையிலே டாக்டர்!

Tuesday, July 24, 2007


வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போச்சி

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்


'வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்'ன்னு ரொம்ப காலமா சொல்லிக்கிட்டு வர்றோம் இல்லையா? இது ஏதோ சம்பிரதாயமாச் சொல்ற வார்த்தையில்லே! இது உண்மைதான்னு விஞ்ஞானிகளே இப்ப ஒத்துக்கறாங்க! அமெரிக்கா, இங்கிலாந்து - இங்கேயெல்லாம் இப்ப 'சிரிப்புச் சிகிச்சை' அப்படின்னு ஒரு புது சிகிச்சை முறையையே உருவாக்கிட்டாங்களாம். மனசுலே அழுத்தம் ஏற்படுதில்லே... இந்த மன அழுத்தம் பல நோய்களை உண்டாக்கிப்புடும். அதிகப்படியான ரத்த அழுத்தம், இதய நோய்கள், வயிற்றுப்புண் (பெப்டிக் அல்சர்) மன உளைச்சல், நரம்பு சம்பந்தமான கோளாறுகள்... இப்படி பல சிக்கல்கள் வர்றதுக்கு மன அழுத்தம் ஒரு முக்கியமான காரணம். இந்த மன அழுத்தத்தை விரட்டிப்புட்டா அந்த நோய்கள் நம்மை நெருங்காது. சரி, மன அழுத்தத்தை விரட்டறத்துக்கு என்ன வழி ? வாய்விட்டுச் சிரிக்கிறதுதான் சுலபமான வழி! அதுக்காகத்தான் இந்தச் சிரிப்பு சிகிச்சை முறையைக் கொண்டுக்கிட்டு வந்திருக்காங்க. அந்த சிகிச்சை அங்கே எப்படி நடக்குதுங்கறதைச் சொல்றேன். அதைக் கேட்டுட்டு நீங்க சிரிக்க ஆரம்பிச்சுடுவீங்க... ஏன்னா அது கேக்கறத்துக்குக் கொஞ்சம் வேடிக்கையாயிருக்கும்! வாய் விட்டுச் சிரிக்கறத்துக்கு முன்னாடி லேசான சுவாசப்பயிற்சி அவசியமாம். மூச்சையிழுத்து வெளியே விடறப்போ கைகளை மேலே தூக்கணும்... அப்புறம் கீழே இறக்கணும்... இப்படி ஒரு பத்து தடவை சுவாசப்பயிற்சி செஞ்ச பிறகு சிரிப்பு சிகிச்சையை ஆரம்பிக்கணும்.
சிகிச்சை நம்பர் ஒன்று :
பலத்த சிரிப்பு. கூட்டமா நின்னுக்க வேண்டியது. யாராவது ஒருத்தர் ஒண்ணு ரெண்டு மூணு சொல்லணும். ஒன்-டூ-த்ரீன்னு சொன்ன உடனே எல்லாரும் கையை உயரே தூக்கிக்கிட்டு... வாயை முழுசாத் திறந்து 'ஹா...' ஹா...!'-ன்னு சிரிக்கணும். இந்த சிரிப்பை இரண்டு நிமிட இடைவெளி விட்டு மறுபடி சிரிக்கலாம்.
சிகிச்சை நம்பர் இரண்டு :
மவுனச்சிரிப்பு. இந்தச் சிரிப்புலே வாய் அகலமாத் திறந்திருக்கணும். சிரிக்கிறவங்க அதிகமா சத்தம் எழுப்பக்கூடாது. அப்படி சிரிச்சிக்கிட்டே ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கணும். இது ரொம்ப இயல்பா இருக்கணும். மவுனச் சிரிப்புலே செயற்கைத்தனம் இருக்கப்புடாது.
சிகிச்சை நம்பர் மூன்று :
உதடு மூடிய சிரிப்பு : இந்தச் சிரிப்புச் சிரிக்கறப்போ உதடுகள் மூடியிருக்கணும். சிரிப்பை வெளியிலே காட்டிக்காமே லேசா முணுமுணுக்கலாம். இந்தப் பயிற்சி நுரையீரலுக்கு நல்லது. அடி வயிற்றுத்தசைக்கு நல்லது. அதைச் சார்ந்திருக்கிற உறுப்புகளுக்கும் நல்லது.
சிகிச்சை நம்பர் நாலு :
நடுத்தர சிரிப்பு : மனசுக்கு அமைதி தேவையா? அதுக்கு இந்தச் சிரிப்பு ரொம்பப் பொருத்தம். நீங்க அதிகமாவும் சிரிக்கப்புடாது... குறைவாவும் சிரிக்கப்புடாது... இதுவும் கூட்டமா இருந்து சிரிக்க வேண்டிய ஒரு சிரிப்புதான்!
சிகிச்சை நம்பர் ஐந்து : நடனச் சிரிப்பு : சிரிச்சிக்கிட்டிருக்கறப்பவே நடனம் ஆடறது மாதிரி அப்படியும் இப்படியும் துள்ளிக் குதிச்சி சிரிக்கணும். அதாவது ஒரு குழந்தையின் சிரிப்பு மாதிரி இது இருக்கணும்! அதுக்காக முரட்டுத்தனமா குதிச்சிக் கையை காலை உடைச்சிக்காதீங்க! மென்மையாக் குதிச்சி சிரிச்சாப் போதும்! இதுதான் இப்ப மேல் நாடுகள்லே உள்ள ஐந்து வகையான சிகிச்சை முறைகள்! சரி இந்த சிகிச்சைக்கு நேரம் காலம் உண்டா? உண்டு! காலை 6 மணி முதல் 7 மணி வரை சிரிப்புச் சிகிச்சைக்கு ரொம்பப் பொருத்தமான நேரமாம்! அதிகாலையிலேயே சிரிப்பை ஆரம்பிச்சுட்டா அன்றைக்குப் பூராவும் நம்மகிட்டே ஒருவிதமான சுறுசுறுப்பு ஒட்டிக்கிட்டே இருக்குமாம்! அனுபவிச்சிப் பார்த்தவங்க சொல்றாங்க!
ஒரு சமயம் ஒரு கல்யாணம் விசாரிக்கப் போயிருந்தேன். முதல் நாளே போய்ச் சேர்ந்துட்டேன். கல்யாண மண்டபத்துலேயே சமையல் கட்டுக்குப் பக்கமா இருந்த ஒரு ரூம்லே நிறைய பேர் படுத்திருந்தாங்க. நானும் ஒரு ஓரமா படுத்துக்கிட்டேன். நடு ராத்திரி தூங்கிக்கிட்டிருந்த ஒருத்தர் திடீர்ன்னு எழுந்திரிச்சார்... ஒரு மாதிரியா சிரிச்சிக்கிட்டே உடம்பை அப்படியும் இப்படியும் நெளிச்சிக்கிட்டே ஆட ஆரம்பிச்சுட்டார்... கொஞ்ச நேரம் கழிச்சி ஆட்டத்தை நிறுத்திட்டு அமைதியாயிட்டார். நான் மெதுவா அவருகிட்டே போய்... ''என்னங்க விவரம்?''-ன்னு விசாரிச்சேன்! ''ஒண்ணுமில்லே சார்... என் சட்டைக்குள்ளே ஒரு கரப்பான் பூச்சி புகுந்துட்டுது.... கிச்சு கிச்சு மூட்டற மாதிரியிருந்துது... அதை வெளியே விரட்டறதுக்காகத்தான் அப்படிப் பண்ணினேன்!'' அப்படின்னார்!

Monday, July 23, 2007

ரசித்த நகைச்சுவை

மனைவி - விசயம் தெரியுமா நமக்கு கல்யாணம் பண்ணிவச்ச புரோகிதர் லாரி ஆக்ஸிடென்ல இறந்துட்டாரு.
கணவன் - அதானே பண்னுன பாவம் சும்மாவிடுமா.
------------------------------------------

மனைவி - ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்திருக்கிற பெண் நல்ல பெண் இல்லைன்கிற உண்மையை சொல்லிடுங்க
கணவன் - எதுக்கு சொல்லனும் அவன்மட்டும் எனக்கு சொன்னானா.

வாய்விட்டு தாராளமாக சிரிக்க வேண்டும்

நாள்தோறும் வாய்விட்டு தாராளமாக சிரிக்க வேண்டும். இப்படி சிரித்தால் இதயத்துக்கு நல்லது. ஏனென்றால் சிரிப்பு, உடல் பயிற்சி போல் ரத்த குழாய் மேலும் பயன் தரும் முறையில் இயங்குவதற்கு உதவும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சிரிப்புக்கு மாறாக மன சோர்வு வந்தால் இதய உறுப்பு பலவீனமாகும் ஆபத்தை அதிகரிக்கும். மனோ பலம் இல்லாது போனால் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று இன்னொரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புஃளோரிடா மாநிலத்தின் ஒர்ண்டோவில் அமைந்துள்ள இதய நோய் ஆய்வகத்தின் ஆண்டு கூட்டத்தில் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை அறிவித்தனர். உடல் பயிற்சி சயயாமல் சிரிக்க வேண்டும் என்று இதற்கு பொருள் இல்லை. வாரத்துக்கு மூன்று முறை கட்டற்ற முறையில் சிரிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் 30 நிமிடம் நாளுக்கு 15 நிமிடம் என்றவிகிதத்தில் சிரித்தால் இதய ரத்தக் குழாய் தொகுதிக்கு நன்மை தரும் என்று மாலிலான் பல்கலைக்கழகத்தின் மருத்துவவியல் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மெக் மீரெ கூறினார். இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்ட 20 தொண்டர்களுக்கு மிரே என்பவரும் அவர்தம் சக பணியாளர்களும் இரண்டு வகை திரைப்படங்களை காண்பித்தனர்.
ஒரு பகுதியினருக்கு சிரிக்கக் கூடிய திரைப்படத்தையும், இன்னொரு பகுதியினருக்கும் மன சோர்வு தரும் திரைப்படத்தையும் காண்பித்தனர். தொண்டர்கள் திரைப்படத்தை கண்ட பின் அவர்களின் ரத்த குழாய் இயங்கும் திறனை அளவீடு செய்தனர். தாராளமாக சிரித்தவரின் உடம்பில் ரத்தம் ஓடும் அளவு சராசரியாக 22 விழுக்காடு அதிகரித்தது. மனம் கட்டுப்படுத்தப்பட்டவரின் உடம்பில் ரத்தம் ஓடும் அளவு சராசரியாக 35 விழுக்காடு குறைந்தது. ரத்த குழாய் சுவரில் கண்டுபிடித்த முக்கிய மாற்றம் ஆக்சிஜின் இயக்கம் விளையும் நன்மைக்குச் சமமாகும். உடல் பயிற்சி விளையும் தசை நெருக்கடி தோற்றம் போன்ற நிலைமையை கண்டுபிடிக்க வில்லை என்று மீரே குறிப்பிட்டார். இதை தவிரவும், துக் பல்கலைக்கழகத்தின் ஜியான் வெய் என்பவரும் அவருடைய சக பணியாளர்களும் 1005 இதய பலவீனமானர்களை பின்பற்றி மன சோர்வு அவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை ஆராய்ந்தனர். லேசான மனச் சோர்வுக்கு ஆளாக்கப்பட்ட நோயாளிகள் மரணமடையும் ஆபத்து 44 விழுக்காடு அதிகரிக்கும் என்று ஜியான் வெய் ஆண்டு கூட்டத்தில் குறிப்பிட்டார். இதற்கான காரணம் பற்றி கண்டறியவில்லை. மன கசப்புக்குள்ளாக்கப்பட்ட நோயாளிகள் உடல் பயிற்சியில் கலந்து கொள்ள மாட்டார்கள். நாள்தோறும் ஒழுங்கான முறையில் மருந்து சாப்பிட மாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர் என்று ஜியான் வெய் கூட்டத்தில் குறிப்பிட்டார். சிரிப்பு, உடல் பயிற்சி போல மனிதருக்கு நன்மை தரும். இதை தவிரவும் ஆக்சிஜின் உடல் பயிற்சி மூலம் மன சோர்வு நிலைமையை பெரிதும் குறைக்கலாம். எந்நேரத்திலும் உடல் பயிற்ச்சியில் ஈடுபட்டால் எந்த மன நிலைமையும் சிறப்பாகின்றது என்று அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தென் மேற்கு மருத்துவ மையத்தில் பணிபுரிகின்ற டாக்டர் திரிவேதி கூறியுள்ளார். அவருடைய கருத்தை உறுதிப்படும் வகையில் 20 முதல் 45 வயதான மன கசப்புக்கு ஆளான 20 பேரை குழுப் பிரிவில் தேர்வு செய்து சோதனையிட்டனர். அவர்களில் சிலர் மிதி வண்டி மூலம் ஆக்சிஜின் பயிற்சியில் ஈடுப்பட வேண்டும். சிலர் மிதமான உடல் பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதில் ஈடுபடும் போது மருந்து சாப்பிட வில்லை.
3 திங்கள் கழிந்த பின் வாரத்துக்கு 3 முதல் 5 வரை ஒவ்வொரு முறை 30 நிமிடம் உடல் பயிற்சியில் ஈடுபட்ட பின் மன சோர்வுக்கு ஆளான நோயாளிகளின் மனக்கசப்பு உணர்ச்சி குறைந்து விட்டது. உடல் பயிற்சியில் கூடுதலாக கலந்து கொண்டால் மனக்கசப்பு உணர்ச்சி குறையும் என்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மகிழ்ச்சிகரமான உணர்ச்சியை நிலை நிறுத்துவது மட்டுமல்ல உணவு உண்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். சரியான முறையில் உணவு உட்கொண்டால் உடம்புக்கு நன்மை தரும். தலைவலி குறையும். எடுத்துக்காட்டாக ஜாக்ரிட்டர் மதுவுடன் கூடிய பானம் ஆகியவை தலைவலி ஏற்படுவதற்கான காரணமாகும். கொகாயின் முதலியவை மனித உடலில் உட்கொள்ளப்பட்ட பின் தலைப் பகுதியிலுள்ள ரத்த குழாய் சுருஙுகுவதை துரிதப்படுத்தும். சிலருக்கு அப்போது தலைவலிக்கும். காரணம் லோஆனை நீக்கும் என்சாய்ம் குறைவு. லோஆன் அவர்களின் உடம்பில் நீண்டகாலமாக தங்கியிருந்தால் அதன் பாதிப்பு வலிமை குறைந்து தலைவலி ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு மாக்னைசட், வைட்டமின் பி நிறைந்த உணவு பொருட்கள் உட்கொண்டால் தலைப் பகுதியிலுள்ள வலி குறையும். அவ்வபோது தலைவலிக்கும் மகளிருக்கு வைட்டமின் பி கூடுதலாக உட்கொண்டால் நல்லது.






நன்றி - தமிழ் கிரி

Saturday, July 21, 2007

நோய் நிவாரணி
சிரித்து மகிழ்வோடு இருப்பதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது என்பது ஜப்பான் பல்கலைக்கழக சமீபத்திய ஆய்வு. மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைத்து நரம்பு மண்டலத்திற்கு புத்துயிர் அளித்து தசை பிடிப்புகளை தளர்த்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இருதயத்தையும் பலப்படுத்துகிறது என்பது நிபுணர்களின் கூற்று.
சிரிப்பும் அதற்கான வாய்ப்பும்
ஒரு மனிதன் தனியாக இருப்பதை விட பலருடன் கலந்து இருக்கும் போது வாய் விட்டு சிரிப்பதற்கு முப்பது மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தை ஒரு நாளில் சராசரியாக 300 முறை சிரிக்கிறதாம். (இனி மேல் வாழ்வில் சிரிக்கவே முடியாது என்பதனாலோ என்னவோ?) வளர்ந்த மனிதனும் கூட ஒரு நாளில் சராசரியாக 17 முறை சிரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நகைப்பென்னும் உடற்பயிற்சி
100 முறை சிரித்தால் அது 15 நிமிடங்கள் வேகமாக சைக்கிள் ஓட்டுவதற்கு சமம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். (நன்றி: தினமணிக்கதிர் 20.7.2003).புண்படுத்துவதும் பண்படுத்துவதும்பிறரைப் புண்படுத்திச் சிரித்து மகிழும் போக்கை (Caustic Humour) இஸ்லாம் முழுமையாக தடை செய்யும் அதே நேரம் எவர் மனதையும் நோகடிக்காத பண்பான ஆரோக்கியமான நகைச்சுவை வரவேற்க்கப்படுகிறது.

போட்டோ ஆல்பம்