Wednesday, October 24, 2007

பீர்பால் கதைகள்

பீர்பால் புகையிலை
> > > > பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள அவரால் முடியவில்லை. அக்பரின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு பீர்பால் புகையிலை உபயோகிப்பது மிகவும் அருவறுப்பாக இருந்தது. நல்ல சந்தர்ப்பம் பார்த்து புகையிலைப் பழக்கத்துக்காகப் பீர்பாலை அவமானப் படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.
> > > > ஒருமுறை மன்னர் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார். அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் சேர்ந்து உலவியவாறு உரையாடிக் கொண்டிருந்தனர்.
> > > > அரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் புகையிலைச் செடி ஒன்று தானாக முளைத்து வளர்ந்து இருந்தது. தெருவிலே சென்று கொண்டிருந்த கழுதை ஒன்று வேலியின் இடுக்கு வழியாக முகத்தினை நுழைத்து அந்த புகையிலைச் செடியைத் திண்ணப் பார்த்தது. இலையில் வாயை வைத்தவுடன் அதன் காரமும் நாற்றமும் பிடிக்காமல் செடியை விட்டுவிட்டு திங்காமல் வெறுப்போடு போய்விட்டது.
> > > > அதனைச் சுட்டிக் காட்டிய மூத்த அமைச்சர், "மன்னர் அவர்களே, பார்த்தீர்களா? நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்தமான புகையிலை கேவலம் அந்த கழுதைக்குக்கூடப் பிடிக்கவில்லை!" என்றார் சிரிப்புடன். அவர் முகத்தில் இப்போது நிம்மதி.
> > > > உடனே பீர்பால் சிரித்துக் கொண்டே, "அமைச்சர் அவர்களே, உண்மையைத்தான் சொன்னீர்கள். புகையிலை எனக்கு மிகவும் பிடித்த பொருள்தான். ஆனால் கழுதைகளுக்குத்தான் புகையிலையைப் பிடிப்பதில்லை!" என்றார் ஒரே போடாக!
> > > > தனது வாக்கு வன்மையால் மூக்குடைத்தார் மூத்த அமைச்சரை .

என்னையும் மக்கள் பண்டிட்ஜி னு கூப்பிடனும்
ஒரு தடவை பீர்பால் கிட்ட சேவாராம் அப்படீங்கரவர் வந்து '' என்னோட அப்பா, தாத்தா இன்னும் அவங்க தாத்தா எல்லாம் பெரிய சமஸ்கிருத பண்டிட்...அவர்ங்களை எல்லாம் அவங்க காலத்துல மக்கள் 'பண்டிட்ஜி' ன்னு கூப்பிடுவாங்க. இப்ப என் கிட்ட எந்த காசோ, பணமோ இல்லை. அது எனக்கு வேண்டாம், ஆனா அவங்களை எல்லாம் கூப்பிட்ட மாதிரி என்னையும் மக்கள் பண்டிட்ஜி னு மக்கள் கூப்பிடனும். அதுக்கு ஒரு வழி சொல்லுங்கன்னு சொன்னாராம்''.
அதுக்கு பீர்பால் சரி அப்ப நான் சொல்றபடி செய்யுங்க. எல்லாரும் உங்களை பண்டிட்ஜீன்னு கூப்பிடுவாங்கன்னு சொன்னாராம். உங்களுக்கு பண்டிட்ஜின்னு கூப்டா பிடிக்காது ன்னு எல்லார்க்கும் தெரியற மாதிரி பண்ணீருங்க அப்புறம் பாருங்கன்னு சொன்னாராம்.
அப்புறம் பீர்பாலும் சேவாராம் இருந்த தெருவுல இருக்குற குழந்தைகள் கிட்ட சேவாராம்க்கு பண்டிட்ஜின்னு கூப்டா பிடிக்காது, அதனால யாரும் அவரை கூப்டாதீங்கன்னு சொன்னாராம். ஆனா குழந்தைகள் அதுக்கு அப்புறம் சேவாராம பண்டிட்ஜீன்னே கூப்பிட..சேவாராமும் அவருக்கு அப்பிடி கூப்ட்டா பிடிக்காத மாதிரி திட்ட ஆரம்பிச்சாராம். அதுக்கு அப்புறம் அந்த ஊர்ல இருந்தவங்க எல்லாரும் அவரை அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.
அவங்க கூப்பிட்டது சேவாராமுக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் irritate பண்றதுக்காக. சேவாராமுக்கு எப்படியோ அவரை பண்டிட்ஜினு கூப்ட்டா போதும்னு

உலகம் ஓர் சத்திரம்
ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல நேரிட்டது. செல்லும் வழியில் அரண்மனை ஒன்று தென்பட்டது. மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு எடுத்தார். அது அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட மண்ணில் இருக்கும் அரண்மனை என்றே அவர் நினைத்தார்.
அந்த அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கிருந்த பசியில் சிறிதும் யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர் அடுத்த அறைக்குச் சென்றார். அழகான பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கையறை. உண்ட மயக்கத்தில் அந்த படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.
வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தன் உணவை உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் சினம்கொண்டு பீர்பாலைத் தட்டி எழுப்பினார்.
"என் அரண்மனைக்குள் புகுந்து என் உணவினை உண்டு, என் படுக்கை அறையில் படுத்திருக்கிறாயே?" என்று அதட்டினார்.
"ஓஹோ... இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்!" என்றார் பீர்பால் அலட்ச்சிக் கொள்ளாமல்.
தன்னை மன்னர் என்று அறிமுகம் செய்தும் சற்றும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம சத்திரம் என்கிறானே இவன் என கோபமுற்றார் அந்த மன்னர்.
"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!" என்று கடிந்தார் மன்னர்.
"மன்னர் அவர்களே.. இது அரண்மனையாகவே இருந்தாலும் இதனையும் தர்ம சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை!" என்றார் பீர்பால்.
"ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்? சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்... மறுநாள் வேறொருவர் வருவார்.. பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல. நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே!" என்றார் மன்னர்.
"மன்னர் அவர்களே உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்?"
"இதே அரண்மனையில்தான்!"
"உமது தந்தையார்?"
"இதே அரண்மனையில்தான்!"
"நாளை உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்?"
"இதென்ன கேள்வி? எனது மகன் தங்குவான்!"
"ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை! தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை!" என்றார் பீர்பால்.
பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு!
"தாங்கள் யார்?" என்று மரியாதையுடன் வினவினார் அரசர்.
"என்னைப் பீர்பால் என்று அழைப்பார்கள்!' என்று பதில் சொன்னார் பீர்பால்.
"அந்த மாமேதை நீங்கள்தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்!" என்றார் அரசர்.
அந்த மன்னனின் அன்புக் கட்டளையை ஏற்று பீர்பால் மேலும் சில நாட்கள் அவரின் விருந்தினராகத் தங்கி இருந்து விட்டு பிறகு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டார்!

விலை உயர்ந்த பொருள்
ஒருமுறை இரவில் நகர்வலம் வருவதற்காக அக்பர் ஒரு கொள்ளைக் காரனைப்போல மாறுவேடம் அணிந்தார். கண்ணாடியில் தனது உருவத்தினை பார்த்தார். அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவரின் உருவ தோற்றத்தினை வைத்து யார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சரியாக அமைந்திருந்தது அந்த வேடம்.
நள்ளிரவு நேரத்தில் பீர்பாலையும் துணைக்கு அழைத்துச் சென்றால் தேவலாம் என நினைத்தார் அக்பர். என்றாலும் பீர்பாலிடம் தான் யாரென்று சொல்லாமல் விளையாடிப் பார்க்க அவருக்கு ஆசை வந்தது.
நள்ளிரவு நேரத்தில் அவர் பீர்பால் வீட்டுக் கதவைத் தட்டினார். வெளியே வந்து பார்த்த பீர்பால் யார் என்று தெரியாமல் ஒருகணம் தடுமாறினார். பிறகு நிதானித்துப் பார்த்தபோது அவருக்கு வந்திருப்பது யார் என்று விள்ளங்கி விட்டது.
அக்பர் தன் குரலை மாற்றிக் கொண்டு, "உன்னிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொடுத்து விடு. இல்லா விட்டால் கொலை செய்து விடுவேன்!" என்று மிரட்டினார்.
பீர்பால் சிரித்துக் கொண்டே, "மன்னர் அவர்களே, என்னிடம் விலை உயர்ந்த பொருள் என்றால் அது எனது உள்ளம்தான். அதையும் ஏற்கெனவே தாங்கள் கொள்ளையிட்டு விட்டீர்கள். அது இருக்கட்டும். மிக சாமானியமான பீர்பாலைச் சந்திக்க தாங்கள் ஏன் மாறுவேடம் அணிய வேண்டும்? சுய உருவத்துடன் என்னைச் சந்திக்க மன்னர் அவர்களுக்கு அச்சமா என்ன?" என்று கேட்டார்.
"பீர்பால்... நீ பலே ஆளய்யா.. நான் எவ்வளவோ சிரமப் பட்டு மாறுவேடம் பூண்டும் ஒரே நொடியில் நீர் கண்டு பிடித்து விட்டீரே!" என்று அவரைப் பாராட்டிய அக்பர் தான் வந்த காரணத்தைக் கூறினார்.


உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்
ஒருநாள் அக்பர் தனது அவையில் அமர்ந்து இருந்தார். அவையில் இருந்தவர்களைப் பார்த்து, "உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்? அவர்களுக்கான இலக்கணம் என்று எதனைக் கருதலாம்?" என்று கேட்டார்.
"மாபெரும் சேனை ஒன்றை ஐந்தாறு வீரர்களை மட்டும் தம்முடன் அழைத்துக் கொண்டு சென்று சமாளித்து வெற்றி பெறும் தளபதியே மாபெரும் வீரர்!" என்றார் ஒருவர்.
"தாம் ஆயுதம் வைத்திருக்காத நிலையிலும் எல்லா ஆயுதங்களும் வைத்திருக்கும் ஒருவனை எதிர்த்துப் போரிட்டு வெள்ளி கொள்பவனே சிறந்த வீரன்!" என்றார் இன்னொருவர்.
"போர் முனையில் போரிட்டு வீர மரணம் அடைந்த அனைவருமே வீரர்கள்தான்!" என்பது இன்னொருத்தரின் பதில்.
இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பதில் அளித்துக் கொண்டிருக்க பீர்பால் மட்டும் அமைதியாக இருந்தார். அது அக்பருக்கு ஆச்சரியத்தினை அளித்தது.
"பீர்பால். என் கேள்விக்கு என்ன பதில்?" என்றார் அக்பர்.
"மன்னர் அவர்களே... என் பதில் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அதனால்தான் சற்று தயக்கத்துடன் இருந்தேன். தாங்களே கேட்ட பிறகு விடையைச் சொல்லாமல் இருப்பது சரியல்ல. வீரம் என்பது வெறும் உடல் பலத்தைக் கொண்டது அல்ல. உள்ளத்தின் உயர் பண்பே வீரம் என்று நான் கருதுகிறேன். தன்னம்பிக்கையுடன் உழைத்துக் கிடைக்கும் வருவாயினை மட்டுமே தன் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்பவன், சுய முயற்சியுடன் தன் கடமைப் பொறுப்பினை நிறைவேற்றும் விதத்தில் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படுபவன் ஆகிய இவர்கள்தான் உண்மையான மாபெரும் வீரர்கள் என்று நான் கருதுகிறேன்!" என்றார் பீர்பால்.
"நீர் கூறுவது உயர்ந்த தத்துவம்தான். ஆனால் வாழ்க்கையில் சுயநல நோக்கம் இல்லாமலும் முழுக்க முழுக்க தன் உழைப்பினை மட்டுமே நம்பி வாழக்க்கூடிய ஒருவன் இருக்கக் கூடும் என்று நான் நினைக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் சுயநல மன்னராகத்தான் இருப்பார்கள் என்பது என் எண்ணம். இதை நான் உனக்கு நிரூபித்துக் காட்ட முடியும்!" என்றார் அக்பர்.
மறுநாளே அக்பர் தன் நாட்டு மக்களுக்கு உத்தரவு ஒன்றினை பிறப்பித்தார். பொதுமக்கள் அனைவருக்கும் ஒருவார காலத்திற்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு இலவசமாக அளிக்கப்படும் என்பதுதான் அந்த செய்தி.
விருந்துக்கென விசாலமான பந்தல் அமைக்கப்பட்டு ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்காணவர்கள் அமர்ந்து சாப்பிட வசதிகள் செய்யப்பட்டன. விருந்தளிப்பு நாளும் தொடங்கியது. மக்கள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட வந்தார்கள். யாரும் வேலைக்கு செல்லவில்லை.
விருந்து தொடங்கி மூன்று நான்கு நாட்கள் கழிந்தன. அக்பரும் பீர்பாலும் மாறுவேடம் தரித்து குதிரைமீது நாடு முழுவதையும் சுற்றி வந்தார்கள். வீடுகள் எல்லாம் காலியாக இருந்தன. தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. மக்கள் மூன்று வேளள உணவைப் புசிக்க விருந்துப் பந்தலில் குழுமிக் கிடந்தனர். ஊரே செயலற்றுக் கிடந்தது.
ஒரு கிராமத்து வயல்பக்கமாக அக்பரும் பீர்பாலும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயலில் வயதான முதியவர் ஒருவர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது உழுது கொண்டிருந்தார்.
அக்பர் அம்முதியவரை நெருங்கி, "பெரியவரே.. இந்தக் கடும் வெயிலிலும் வேலை செய்துகொண்டு இருக்கிறீரே? மன்னர் அனைவருக்கும் ஒருவாரத்திற்கு மூன்று வேளையும் அறுசுவை விருந்து அளிக்கிறாரே.. அதைப்பற்றி உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டார்.
"ஐயா. அந்தச் செய்தி என் காதிலும் வந்து விழுந்தது. ஆனால் என்னைப்போல உழைப்பாளிகளுக்கு அறுசுவை விருந்து சாப்பிட ஏது நேரம்?" என்று சொன்னார் முதியவர்.
"அறுசுவை விருந்து கிடைக்கும்போது உழைப்பை சில நாள்களுக்கு ஒதுக்கி வைக்கக் கூடாதா? இந்த சந்தர்ப்பத்தினை தவற விட்டால் அப்புறம் இவ்வளவு அருமையான விருந்தினை சாப்பிட முடியாதே!" என்று கேட்டார் அக்பர்.
"ஐயா. நான் சாமான்ய உழழப்பாளி. உழைத்துச் சாப்பிட்டு பழகிப் போனவன். உழைக்காமல் கிடைக்கும் உணவு என் குடலில் செரிமானம் ஆகாது. தவிர மன்னர் ஒரு வார காலத்திற்கு மட்டும்தான் உணவு அளிப்பார். அதன்பிறகு நான் உழைத்துத்தானே சாப்பிட்டு ஆகவேண்டும்? என்னைப் பொறுத்த மட்டில் என் உழைப்புதான் எனக்கு எல்லாமே. உழைப்புக்கு மிஞ்சி உயர்ந்ததாக எதுவுமே இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!" என்று கூறினார் முதியவர். பின் 'ஹேய்' என்று மாட்டை அதட்டியவாறு தொடர்ந்து ஏர் உழத் தொடங்கினார்.
முதியவரின் சொற்களைக் கேட்டு மன்னர் அக்பர் பிரமித்து நின்றார். பின் பீர்பாலை நோக்கி, "பீர்பால்.. உண்மையிலேயே ...


சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்
அக்பருக்கும் பீர்பாலுக்குமமடிக்கடி ஏற்படும் மனவேறு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல... பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார்.
"இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணணவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார்.
"சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்!
ப்பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலைஉடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார்.
பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார்.
"இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர்.
"இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பிந்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார்.
செல்லும் வழியில்... "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர்.
"எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால்.
அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால்.
"என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடடய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர்.
"மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக.
"எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன்.
"தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள். அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால்.
அக்பர் அமைச்சரை நோக்கினார்... உடனே அமைச்சர் பதில் அளித்தார்..
"மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!"
அப்போது பீர்பால், "மன்னர் பிரான் அவர்களே,"என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார்.
பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. வாய்விட்டுச் சிரித்தவாறே, "உம்மை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.

நன்றி : மூர்த்தி முத்தமிழ்மன்றம்

3 comments:

thanasingh said...

Nice post .. Thanks by
website design in tirunelveli
Printing in tirunelveli
Brochure design in tirunelveli
Logo design in tirunelveli

Anonymous said...

Online Roulette, Blackjack, Craps and more - Vntopbet
Play 1XBET a new game online with Vntopbet - a secure, 12bet secure and affordable way to play! Our friendly dealers work with you on every single bet! bk8

absolomkaake said...

Betway Casino India » Review & Bonus Code (2021)
Betway Casino Review ⚡ Read our review ✚ Get a 100% bonus up casinositefun to ₹5000 + 50 Free Spins ✓ casinosites Is Betway safe on mobile? Rating: 5 · ‎Review by CasinoGuide

போட்டோ ஆல்பம்